சிங்கப்பூரில் 139 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் கிருமித்தொற்றால் பாதிப்பு..!

139 maids tested positive for COVID-19
139 Maids tested positive for COVID-19 (Photo: Reuters)

சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வரை, மொத்தம் 139 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் (FDW) COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ எழுத்துபூர்வமான நாடாளுமன்ற பதிலில் தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்ட பணிப்பெண்களின் விகிதம் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங்கின் (Tan Wu Meng) கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் S$1,000 வெள்ளி நோட்டுகள் வெளியீடு நிறுத்தம்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவை

வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சம்பந்தப்பட்ட 139 COVID-19 சம்பவங்களில், 109 வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவை.

அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றும் போது அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது என்று திருமதி. தியோ குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் பாதிக்கப்பட்டவை

இதில் மீதமுள்ள 30 உள்நாட்டில் பாதிக்கப்பட்டவை, அவர்கள் தொடர்புடைய கடைசி சம்பவம் கடந்த ஜூலை 19 அன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 28, 2020 நிலவரப்படி, இந்த 30 உள்நாட்டு அளவில் பாதிக்கப்பட்ட FDW சம்பவங்கள், 2,268 உள்ளூர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு பகுதியாகும்.

குறைவாக விகிதம்

மேலும், பணிப்பெண்களிடையே 0.01 சதவீத தொற்று விகிதம் பதிவாகியுள்ளது, இது ஒட்டுமொத்த சமூக அளவிலான 0.04 சதவீதத்தை விட குறைவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த 30 சம்பவங்களில், 24 பேர் முதலாளிகளின் இல்லத்தில் ஏற்பட்ட நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 6 பேர் முதலாளிகளுக்கு இந்த தொற்றை பரப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இருவருக்கு கிருமித்தொற்று..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…