சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணின் பலே திட்டம்…சுற்றிவளைத்த போலீசார்…கம்பி என்னும் பரிதாபம்!

Pic: Shutterstock (for illustrative purpose only

சிங்கப்பூர் காமன் வெல்த் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி காலை பணிப்பெண்ணின் முதலாளி ஒருவர் அவரது படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, தமது கழுத்தில் கூர்மையான கருவி ஒன்று அழுத்தப்பட்டதை உணர்ந்ததாகவும், கண் விழித்திப் பார்த்தபோது அந்தப் பணிப்பெண் கையில் கத்தியுடன் பணம் கேட்டு தம்மை மிரட்டியதாகவும் அந்த முதலாளி கூறினார்.

இதையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், முதலாளியின் கைகளில் காயம் ஏற்பட்டது. பணிப்பெண் மடிக்கணினியைப் பயன்படுத்தி முதலாளியின் தலையில் பலமுறை அடித்தாகவும், உயிருக்குப் பயந்து பணம், நகை இருக்கும் இடத்தைப் பணிப்பெண்ணிடம் அந்த முதலாளி கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கப்பூரிலிருந்து தப்ப முயற்சி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பின்னர், அந்த பணிப்பெண் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சுருட்டிக்கொண்டு வீட்டிலிருந்து தப்பி சென்று, சொந்த நாடான மியன்மருக்கு செல்ல விமான டிக்கெட்டை வாங்கினார். ஆனால், விமானத்துக்குள் செல்லும் முன்பே போலீசார் பணிப்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து, முதலாளியைத் தாக்கி அவரிடமிருந்து $37,000க்கும் மேற்பட்ட ரொக்கம், பொருட்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்த மியன்மார் பணிப்பெண்ணுக்கு 6 ஆண்டுகள், 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்டது மட்டுமின்றி வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்தையும் பணிப்பெண் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட முதலாளியின் அடையாளத்தைக் காக்க பணிப்பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுறையில் வெளிநாட்டுக்கு சென்ற ஆடவர்… மனைவியை கொலை செய்ததாக குற்றச்சாட்டு!