மலேசியாவில் நடந்த உலகளாவிய தமிழ் பள்ளி ஆண்டு விழாவில் தமிழக பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்பு!

Photo: Malasiya Minister Datuk Seri M Saravanan Official Facebook Page

கடந்த அக்டோபர் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் (Kala mandapam Hall, Brickfields) உலகளாவிய தமிழ் பள்ளியின் (Global Tamil School) முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவானது தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

“நவம்பர் மாதத்தில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்”- சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

பிரபல தமிழக பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துக் கொணடு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். அதேபோல், மலேசிய நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீசரவணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பள்ளி குழந்தைகளின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளுக்கு பதக்கங்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

“மோர்பி பாலம் இடிந்து விபத்து- உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் சிங்கப்பூர் துணை தூதரகம்”: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

இந்த விழாவில், மலேசிய வாழ் தமிழர்கள், பள்ளி நிர்வாகிகள் என சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.