மலேசியாவில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி!

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

மலேசியாவில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பாடு செய்யப்பட்ட VTL திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட 14 மணி நேரத்தில் 4,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- அறிவிப்பை வெளியிட்டது ‘FlyScoot’ நிறுவனம்!

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) செவ்வாயன்று இதனை தெரிவித்தது.

கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 23.59 மணி நிலவரப்படி, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர 4,124 பயணிகளுக்கு பயண அனுமதிகள் (vaccinated travel passes) வழங்கப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் 29 முதல் தனிமைப்படுத்தலின்றி கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செல்ல இந்த திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேசியப் பயணிகளுக்கான அனுமதி விண்ணப்பம் கடந்த திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.

இந்தியா-சிங்கப்பூர் பயணிகள் வணிக விமான சேவை: நெருக்கமாகப் பணியாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!