இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?

(Photo: India in Singapore/Twitter)

சர்வதேச பயணிகளுக்கு வரும் மார்ச் 1, 2022 முதல் நாட்டின் எல்லைகளைத் திறக்க மலேசிய அரசாங்கத்தின் ஆலோசனை கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், இனி கட்டாயமாக வைக்கப்படும் தனிமைக்கான உத்தரவு இல்லாமல் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவும் அது பரிந்துரை செய்துள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!

மலேசியாவின் தேசிய பொருளாதார வளர்ச்சி கழக தலைவர் மற்றும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் இது பற்றி பேசினார்.

அப்போது, மலேசியாவுக்கு பயணம் செய்யும் முன்பும், மலேசியாவுக்கு வந்த பிறகும் கோவிட்-19 பரிசோதனைகளைப் மேற்கொள்வது அவசியம் என விளக்கினார்.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எல்லைகளை முழுமையாக திறப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், கட்டாயமாக வைக்கப்படும் தனிமைக்கான உத்தரவு இல்லாமல் அடுத்த மாதம் மார்ச் 1 முதல் நாட்டின் எல்லைகளை முழுமையாகத் திறக்க கழகம் ஒப்புதல் வழங்கியதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலர் சிங்கப்பூரின் எல்லைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். சிங்கப்பூரில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

வரும் காலங்களில், அதாவது விரைவில் சிங்கப்பூர் எல்லைகளும் திறக்கப்படலாம் என பல்வேறு தரப்பினர் கணித்து வருகின்றனர். நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.

சிங்கப்பூரில் பால் பவுடர் வாங்கியவருக்கு அடித்த அதிஷ்டம்… குலுக்கலில் S$88,888 ரொக்கப் பரிசை தட்டி சென்றார்!