100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஊன்றுகோலுடன் ஓடிய 11 வயது சிறுவன்.. “உன்னால் முடியும்” – கூடவே ஓடி உற்சாகப்படுத்திய ஆசிரியர்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஊன்றுகோலுடன் ஓடிய 11 வயது சிறுவன்.. "உன்னால் முடியும்" - கூடவே ஓடி உற்சாகப்படுத்திய ஆசிரியர்
faridkamaruddin18/TikTok

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஊன்றுகோலுடன் ஓடிய 11 வயது சிறுவன் வெற்றிகரமாக எல்லையை கடந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், சிறுவன் கடைசியாக எல்லையை அடையும் வரை அவருடனே ஓடி உற்சாகப்படுத்திய ஆசிரியரை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு கைகொடுக்கும் Singtel – S$600 மதிப்புள்ள கட்டண சலுகை

முஹம்மது அகில் நௌஃபல் சாஹிரான் என்ற அந்த சிறுவன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது, அது சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த ஓட்டப்போட்டி கடந்த ஆகஸ்ட் 23 அன்று ஜெரான்டட் மாவட்ட பள்ளி விளையாட்டு கவுன்சிலின் (MSSD) சிறப்பு கல்வி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு பகுதியாக நடந்தது.

பாக்டீரியா தொற்று காரணமாக 2015 ஆம் ஆண்டு சிறுவரின் இடது கால் துண்டிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

கால் போனாலும் அவரது நம்பிக்கை ஒருபோது போகவில்லை. அவர் எப்போதும் விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்தில் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் தடவையாக ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாகவும், மற்ற பங்கேற்பாளர்களுக்கு அருகில் நிற்க சங்கடப்பட்டதாகவும் அகில் கூறினார்.

இருப்பினும், போட்டியில் கலந்துகொள்ள முக்கிய காரணம் ஆசிரியர் தான் என்றும் அவர் கூறினார்.

மேலும், அகிலை அவர் கடைசி வரை உற்சாகப்படுத்தி எல்லையை கடக்க செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்று தந்துள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்திய ஊழியர்களை ஈர்த்த “சிங்கப்பூர் வேலை விளம்பரம்” – வேலைக்கு வழங்கப்பட்ட சிறப்புகளை கண்டு வாயடைத்து போன ஊழியர்கள்