சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் – துண்டு துண்டாக கிடந்த பிரேதம்

சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் - துண்டு துண்டாக கிடந்த பிரேதம்
Bernama

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கருப்பு சூட்கேஸில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

கூர்மையான ஆயுதத்தால் அடித்து, காயங்களுக்கு உள்ளாகி அவர் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், துண்டாக வெட்டப்பட்ட அந்த சடலம் வெளிநாட்டவர் என்பதைக் காட்டுகிறது.

இதனை சுங்கை பூலோ வட்டார காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஷஃபாடன் அபு பக்கர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் முஸ்லீம் இல்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவர் யார் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொலை என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.