மலேசிய நிதியமைச்சருக்கு மதிய விருந்து அளித்த சிங்கப்பூர் அமைச்சர்கள்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மலேசிய நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் பின் தெங்கு அப்துல் அஜிஸ் (Malaysian Finance Minister Tengku Zafrul bin Tengku Abdul Aziz) அரசுமுறை பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை வந்த இருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இல்லை!

இச்சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பொருளாதாரம், கொரோனா பரவல், வேலை வாய்ப்பு, கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (06/12/2021) மலேசிய நிதியமைச்சருக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் மதிய உணவு விருந்தை அளித்தனர்.

சிங்கப்பூரில் செலவுகள் அதிகரிக்குமா? உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் 2021 பட்டியலில் சிங்கப்பூர்!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மலேசிய நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் பின் தெங்கு அப்துல் அஜிஸுக்கு அமைச்சர் டான் சீ லெங்குடன் மதிய உணவு வழங்குவதில் மகிழ்ச்சி. தெங்கு ஜஃப்ருல் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து நல்ல கருத்து பரிமாற்றம் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.