சிங்கப்பூரரை கைது செய்த மலேசிய காவல்துறை- காரணம் என்ன தெரியுமா?

வெளிநாட்டு ஊழியரை

 

மலேசியா நாட்டில் சலுகை விலையில் பெட்ரோல், அந்நாட்டு மக்களுக்கும், அந்த நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த சலுகை விலையில் வழங்கப்படும் பெட்ரோல் கிடையாது.

“தேசிய தின பேரணி உரையில் கலந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு”- அழைப்பு விடுத்த சிங்கப்பூர் பிரதமர்!

இந்த நிலையில், மலேசியாவில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் சலுகை விலையில் விற்கப்படும் பெட்ரோலை சிங்கப்பூரர் ஒருவர் தனது வாகனத்திற்கு நிரப்பியுள்ளார். அரசின் விதிமுறைகளை மீறி முறைகேடாக பெட்ரோலை வாங்கிய சிங்கப்பூரரைப் பார்த்த, உணவை விநியோகிக்கும் ஊழியர், அவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மிகப்பெரிய சண்டை அளவிற்கு சென்றது. பின்னர், இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதன் காரணமாக, பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலானது. மேலும், அதிகளவில் காணொளி பகிரப்பட்டதால், மலேசியா காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது.

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மலேசியாவைச் சேர்ந்த உணவு விநியோகம் செய்யும் ஊழியரிடம் சண்டையிட்ட சிங்கப்பூரரைத் தேடி வந்த நிலையில், ஜூன் 06- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று ஜோகூரில் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் சண்டையிட்டதை ஒப்புக்கொண்டார். எனினும், அந்த சிங்கப்பூரர் மீது வேறு எந்த விதமான குற்ற நடவடிக்கைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.