மலேசிய ரிங்கிட்டு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய உச்சம்!

மலேசிய ரிங்கிட்டு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய உச்சம்!
Photo: Google

 

மலேசியாவின் ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்

மலேசியா நாட்டின் ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது, அந்த வகையில், பிப்ரவரி 19- ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று காலை 10.00 மணியளவில் ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 3.5562 ரிங்கிட்டு பரிவர்த்தனையாகிறது. இதேபோல், கடந்த பிப்ரவரி 15- ஆம் தேதி ஒரு வெள்ளி, 3.5505 ரிங்கிட்டு பரிவர்த்தனையானது.

கடந்த ஆண்டில் ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் மதிப்பு 7.27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு கடந்த 1998- ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் கடும் சரிவைக் கண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ‘மாசி மகம் பௌர்ணமி’ பூஜை- பக்தர்களுக்கு அழைப்பு!

கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு 4.79 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், சிங்கப்பூரர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.