அடித்து துன்புறுத்துறாங்க…. காப்பாத்துங்க ப்ளீஸ்- மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் பணத்தைத் தராமல் அடித்து துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து இசக்கிமுத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

“வாடகைக்கு இடம் ஏற்பாடு பண்ணி தர்றோம்” – வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றிய போலி ஏஜெண்டுகள்: உஷார்

அந்த காணொளியில் இசக்கிமுத்து கூறியதாவது, “எலக்ட்ரீசியன் வேலை என்று அழைத்து வந்தார்கள்; ஆனால் வேறு வேலைகளைக் கொடுத்தார்கள், அதையும் பார்த்தோம். ஒரு மாதம் ஆனது; இரண்டு மாதம் ஆனது. சம்பளம் கேட்டோம் அடித்து துன்புறுத்துகிறார்கள்.

திருப்பதியில் விபத்தில் இறந்த இருவரின் உடல் சிங்கப்பூர் வந்தது.. இறுதிச்சடங்கு எங்கு?

சாப்பாடு இல்லை; மொபைல் ஃபோனை உடைத்து விட்டார்கள். அப்பா, அம்மா கூட பேச முடியவில்லை. தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், காவல்துறை அதிகாரிகளும் எங்களை எப்படியாவது காப்பாத்தணும்; எங்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.