“பைக், கார் இருந்தால் தான் பள்ளிக்கு போவேன்” என்று சொல்லும் பிள்ளைகள் மத்தியில் 14 கிமீ மலையில் நடந்து சென்றே படித்த மாணவன்!

malaysian-boy-want-to-study-2

மலேசியப் பள்ளி மாணவர் ஒருவர் சுமார் 14 கிமீ மலையில் நடந்தே சென்று தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார்.

சேறு நிறைந்த மற்றும் வழுக்கும் சரிவுகள் கொண்ட அந்த மலை வழியாக சுமார் 14 கிமீ தனியாகப் சென்று அவர் படித்து வருவதை கேட்கும் நமக்கு அது அதிர்ச்சியை தருகிறது.

சொந்த நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் – “சிங்கப்பூரில் வேலை” ஏன் இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது?

12 வயதுமிக்க அயோன் மேன்சன் என்ற அந்த பள்ளி சிறுவனின் கதையை முதன்முதலில் அவரது முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அது வலைத்தளங்களில் தீயாக பரவியதை அடுத்து, மலேசியாவில் உள்ள பல ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய 12 வயதிலேயே, அயோன் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஒன்று வீட்டில் தங்கி அவரது குடும்பத்திற்கு உதவு வேண்டும் அல்லது மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக தனது கிராமத்தை தாண்டி செல்ல வேண்டும்.

பொருளாதார ரீதியாக அயோன் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அவரது தந்தை ஒரு விவசாயி, தந்தையை மட்டும் நம்பி இருக்கும் குடும்பத்தில் பிறந்த ஏழு குழந்தைகளில் நான்காவது குழந்தை அயோன்.

அவரது குடும்ப வறுமை மற்றும் அவரது கிராமத்திற்கும் இடைநிலைப் பள்ளிக்கும் இடையே உள்ள புவியியல் தடையின் காரணமாக, அயோன் தனது கல்வியைத் துறக்கத் முடிவு செய்தார்.

இருப்பினும் அவருக்கு கல்வியை தொடர வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது. அப்போது தான் 14 கி.மீ நடந்தே பயணம் செய்து படிப்பை தொடர எண்ணினார் அயோன்.

சேறு நிறைந்த மற்றும் வழுக்கும் சரிவுகள் கொண்ட அந்த மலை பகுதியில் தனியாக நடந்தே பள்ளிக்கு செல்ல தொடங்கினர் அவர்.

அவரின் கதை பலருக்கும் தீயாய் பரவ, முன்னாள் மலேசிய நடிகரான அட்ரியன் எடி தனிப்பட்ட முறையில் அத்தியாவசியப் பொருட்களை அயோனுக்கு வாங்கி கொடுத்தார்.

அதில் அயோன் கடினமாகப் படித்து வெற்றிபெற சைக்கிள் ஒரு பரிசாகவும் ஊக்கமாகவும் இருந்தது.

படிப்பு தன்னுடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த அந்த சிறுவனின் வறுமைக்கு கிடைத்த பரிசாக அதை அனைவரும் பார்த்தனர்.

பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கர்ப்பிணி மனைவிக்கு ஒரே நாளில் S$70,000க்கு அதிக நிதி திரட்டு