மலேசிய சரக்கு லாரி ஓட்டுனர்களுக்கு சிங்கப்பூரில் தடுப்பூசி – ஓட்டுனர்கள் வரவேற்பு!

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூருக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் மலேசிய சரக்கு லாரி ஓட்டுநர்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

தடுப்பூசி திட்டம் மூலம், COVID-19 மருத்துவ சோதனைகள் காரணமாக சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் என்று அவர்கள் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

16 வயது சிறுமியை காணவில்லை – தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு போலீஸ் வேண்டுகோள்

மலேசியாவிலிருந்து வழக்கமாக சிங்கப்பூர் வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்களுக்கும் இந்த மாத இறுதியில் தடுப்பூசிகள் போடப்படும் என்று கடந்த மார்ச் 8 அன்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுள்ளவர்களுக்கு வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் SMS மூலம் தகவல் தெரிவிக்கும்.

பின்னர், சிங்கப்பூரில் நியமிக்கப்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு தொடர்பு கொள்ளப்படும் என்றும் MOH கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்… நிறுவனத்தின் இணை நிறுவனருக்கு அபராதம்!