சிங்கப்பூரில் தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

(Photo: GV Wire)

சிங்கப்பூரில் தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் முஹம்மது ஃபிர்டோஸ் கமால் இண்ட்ஸாம் (வயது 34) என்பவர் மீது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் என்னும் பயங்கரவாத அமைப்பு சம்பந்தமான பொருட்கள் வைத்திருப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள் ஃபிர்டோஸ் மீது சுமத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவருக்கு முதல் 3 சோதனைகளில் நெகட்டிவ்… 4ஆம் சோதனையில் தொற்று உறுதி!

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் மலேசிய அதிகாரிகளிடம் ஃபிர்டோஸ் ஒப்படைக்கப்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது.

ஃபிர்டோஷின் மனைவியும் இவருடைய தீவிரவாத எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்னும் பயங்கரவாத அமைப்பிற்க்காக ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுவதற்காக இருவரும் சிரியா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஃபிர்டோஷின் மனைவி ஒரு சமயக் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடைய மனைவிக்கு இரண்டு ஆண்டு கட்டுப்பாடு உத்தரவும் ஆசிரியர் பணியாற்ற தடையும் விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத அமைப்பிற்க்காக தனது ஊடக பக்கங்களில் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களை பதிவிட்டுவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தோ பாயோ விபத்தில் காரின்கீழ் சிக்கிய 6 வயது குழந்தை… ஓட்டுநர் கைது