சிங்கப்பூரில் மலேசிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு; COVID-19 காரணமில்லை – MOH..!

Malaysian man death in Singapore 
MOH said that a 40-year-old Malaysian man who was confirmed to have COVID-19 on Friday died from causes not due to the coronavirus.

சிங்கப்பூரில் மலேசியா நாட்டை சேர்ந்த 40 வயது நிரம்பிய ஆடவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

MOH தனது தினசரி அறிவிப்பில், அவருக்கு COVID-19 தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இது 4754வது சம்பவமாக பட்டியலிடப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 596 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மேலும் அவர் மரணத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. அவர் இதயக்கோளாறு (Cardiogenic shock) காரணமாகவே உயிரிழந்ததாக MOH தெளிவுபடுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நண்பகல் (ஏப்ரல் 19) நிலவரப்படி, புதிதாக 596 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 6,588ஆக உயர்ந்துள்ளது.