பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்

malaysian-motorcyclist-fatal-bike crash
@nanmanjoi8715/Twitter

பைக்கில் சூப்பர்மேன் போல சாகசம் செய்த மலேசிய ஆடவர் காரில் மோதி பரிதாபமாக மரணித்தார்.

முஹம்மது அகிட் மட் ரோசி என்ற 18 வயதான அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை செய்து சிக்கிய ஊழியர் – கைது செய்த போலீஸ்

இந்தச் சம்பவம் ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், பினாங்கில் உள்ள துன் Dr லிம் சோங் யூ அதிவிரைவுச்சாலையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மின்னல் வேகத்தில் அவர் பைக்கில் செல்லும் காணொளியும், இறுதியாக அவர் காரில் மோதும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடன் அதிவிரைவாக வந்த இரண்டாவது பைக் நூலிழையில் தப்பியது.

அவர் மோதிய காரின் ஓட்டுனருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வீடியோ சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம், ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் காணொளியை கீழே காணலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் பாதிக்கப்படும் 32 பேருந்து சேவைகள்; ஏன்..?