கனவுகளோடு வேலைக்கு சென்ற முதல் நாள்… லிப்ட்டில் இருந்து விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த மலேசிய ஊழியர்!

மலேசியா: சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சென்ற முதல் நாளிலேயே மலேசிய ஊழியர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியரான அவர் வெறும் 18 வயது நிரம்பிய ஆடவர் என்பது நமக்கு கூடுதலாக கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று லிஃப்டில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

ஆண்ட்ரூ முண்டிங் குலிங் என அடையாளம் கூறப்படும் அந்த ஊழியர், விபத்து நடந்தபோது சரவாக்கின் பிந்துலுவில் உள்ள சூப்பர் மார்க்கட்டில் பெட்டிகளை நகர்த்திக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் சர்க்யூட் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கிடங்கு லிஃப்டின் மேற்பகுதியில் நின்று கொண்டு ஊழியர் பொருட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

கடைசியாக, லிப்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சக ஊழியரிடம் சரக்கு பெட்டியை கொடுக்க முயன்றபோது லிஃப்ட் திடீரென சரிந்தது.

அதனை அடுத்து, மூன்றாவது மாடியில் இருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார், இதில் அவர் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பாக ஒருவரை தேடும் போலீசார்!