பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

bukit-batok-clinic-staff-customer

புக்கிட் பாத்தோக்கில் உள்ள கிளினிக் ஒன்றில் நேற்று திங்கள்கிழமை (ஏப். 18) இரண்டு பெண்கள் இடையே நடந்த கடும் வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது மகனுடன் இருந்த பெண்ணின் சக்கர நாற்காலியை, எவர்ஹெல்த் ஃபேமிலி கிளினிக் மற்றும் சர்ஜரியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கோபத்தில் உதைக்கும் வீடியோ பரவி வைரலானது.

வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Le Quest ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள அந்த கிளினிக் சம்மந்தப்பட்ட வீடியோ பொது வெளியில் கவனத்திற்கு சென்றதை அடுத்து அந்நிறுவனம் Facebook பதிவில் மன்னிப்பு கேட்டது.

ஊழியருக்கு, பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தபோது, “பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்… நாங்கள் சுத்தம் செய்கிறோம்” என்று கண்ணீருடன் தனது தாயைக் கட்டிக்கொண்டு மகன் கெஞ்சுவதையும் வீடியோ வாயிலாக கேட்கலாம்.

மேலும், ஊழியர் கடும் கோபத்தில் சக்கர நாற்காலியை உதைப்பதையும், சிறுவன் அஞ்சி நடுங்கி முழுவதையும் அதில் காணமுடிகிறது.

மற்றொரு சிசிடிவி வீடியோவில், கிளினிக் உள்ளே தாய்க்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஊழியரை நோக்கி அந்த பெண் பொருளை எறிவதையும் காண முடிந்தது.

“சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இதை கலந்துபேச சிறிது நேரம் கொடுங்கள்,” என்று கிளினிக் தனது பதிவில் கூறியுள்ளது.

பொது இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!