வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை

(Photo: ET)

ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இயங்க முடியாமல் திணறுவதாக துப்புரவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மலேசியா அந்நாட்டு எல்லைகளை முழுவதுமாக திறந்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கான பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

இதனால் நிறுவனங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக கூறியுள்ளன. அதாவது புதிய வேலைகளை ஒப்பந்தம் செய்யமுடியாமல் போவதாகவும், மேலும் பழைய வேலைகளை செய்ய முடியாமல் அதனை கைவிடும் சூழல் உள்ளதாகவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

குறிப்பாக மலேசிய ஊழியர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதால் இந்த பற்றாக்குறை தலை தூக்கியுள்ளது.

20 பேர் தேவைப்படும் வேலைக்கு வெறும் 7 பேர் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசியா, சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் இருந்தும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க அரசாங்கம் அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்று சில நிறுவனங்கள் கூறியுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட “பிரிட்ஜெட் டான்” காலமானார்