சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

jasmine-ng-jing-yan-missing
SPF

சிங்கப்பூரில் 12 வயதுமிக்க சிறுமியை கடந்த சனிக்கிழமை (ஏப். 16) இரவு 10:15 மணி முதல் இரண்டு நாட்களாக காணவில்லை.

ஜாஸ்மின் இங் ஜிங் யான் (Jasmine Ng Jing Yan) எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட “பிரிட்ஜெட் டான்” காலமானார்

வெள்ளைச் சட்டை மற்றும் சாம்பல் நிற பேன்ட் அணிந்திருந்த ஜாஸ்மின், பிளாக் 187B Rivervale Dr. இல் கடைசியாக காணப்பட்டார் என சிங்கப்பூர் காவல் படை கூறியுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அவரை கண்டுபிடித்தால் 999 என்ற எண்ணை அழைக்குமாறும் பொதுமக்களிடம் போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டாக்ஸி பயணிகளுக்கு தமிழ் ஊழியர் செய்த உதவி… “மற்றவர்களுக்கு உதவுவதில் தமிழனை அடிச்சிக்க முடியாது” – குவியும் பாராட்டு