சிங்கப்பூரில் நான்கு பேரை கத்தியால் குத்திய ஆடவர் கைது.!

Man linked knife attack

சிங்கப்பூரில் நேற்று (07-06-2021) நான்கு பேரை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில், 48 வயதான ஸைனுட்டீன் தியோ (Zainuddin Teo) என்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங் செங் லூங் (Ng Cheng Loong) என்பவரை வேண்டுமென்றே சமையலறை கத்தியால் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Jalan Bukit Merah சாலையில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் தங்கியிருந்த நான்கு பேரை தியோ கத்தியால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.

சைக்கிளிங் செல்பவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!

தியோ தனியாகச் செயல்பட்டதாகவும், அது பயங்கரவாதச் செயல் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்த வட்டாரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கத்தியால் நான்கு பேரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள ஸைனுட்டீன் தியோ மனநலக் கண்காணிப்புக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தான ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், தியோவிற்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டு வரை சிறைத் தண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.

சீனாவுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!