பிளாட்டின் 4வது மாடியில் இருந்து கண்ணாடி, இரும்பு கம்பிகளை தூக்கி எறிந்த ஆடவர் கைது

guillemard-road-flat-high-rise-littering-cassia-crescent
Shin Min Daily News & Google Maps

Guillemard சாலைக்கு அருகில் அமைந்துள்ள பிளாக் 52 காசியா கிரசென்ட்டில் வசிக்கும் 64 வயதுமிக்க ஆடவர் அடுக்குமாடி வீட்டில் இருந்து குப்பைகளை வெளியே வீசி எறிந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

அவர், அந்த அடுக்குமாடி பிளாட்டில் நான்காவது மாடியில் இருந்து அதிக பொருட்கள் தூக்கி எறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்லாங் ஸ்போர்ட்ஸ் சென்டரில் திடீரென மயங்கி கீழே விழுந்த ஆடவர் – சிகிச்சை பலனின்றி மரணம்

பின்னர், நேற்று முன்தினம் (மார்ச் 18) வெள்ளிக்கிழமை காலை 11:25 மணியளவில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அவர் தூக்கி எறிந்த பொருட்களில் கண்ணாடி பொருட்களை மற்றும் இரும்பு கம்பிகள் இருந்ததாக கூறப்படுகிறது, அவை தரையில் விழுந்து நொறுங்கின.

பிளாக்கில் பல இடங்களில் அதிக அளவில் அவர் குப்பைகளை கொட்டியது தொடர்பில் இந்த கைது நடந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?