பீச் ரோட்டில் ஆடவரை தாக்கிய சந்தேகத்தில் ஒருவர் கைது; காயங்களுடன் இருந்த ஆடவர் மருத்துவனையில் அனுமதி

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

சிங்கப்பூர்: ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு தானாக முன்வந்து கடும் காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணியளவில், போலீஸ் அதிகாரிகள் பீச் ரோட்டில் நடைபயண ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, டாக்ஸி ஸ்டாண்டில் ஏதோ ஒரு சலசலப்பை அதிகாரிகள் கவனித்தனர். அங்கு 31 வயதான ஆடவர் ஒருவரின் மார்பு மற்றும் வயிற்றில் கீறல் காயங்கள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டனர்.

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, அதனால் இறந்தாலோ நிறுவனங்கள் தான் பொறுப்பு – MOM அதிரடி அறிவிப்பு

அவரிடம் விசாரித்தபோது, கூர்மையான பொருளால் தன்னை வேறொருவர் தாக்கியதாக அந்த ஆடவர் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட ஆடவர் அளித்த சாட்சிகளின் அடிப்படையில், டாக்ஸி ஸ்டாண்ட் அருகே 50 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். சாட்சியமாக பேனா கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒவரையொருவர் முன்பின் அறியாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கோர விபத்தில் சிக்கி ஆடவர் பலி… கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக டிரைவர் கைது