காபி கடையில் இளைஞருக்கு சரமாரி வெட்டு… தப்பி ஓடியவரை வளைத்து பிடித்தது போலீஸ்!

Man, 21, slashed multiple times in Geylang coffee shop
Shin Min Daily News reader

லோரோங் 18 கேலாங் (Lorong 18 Geylang) அருகே அமைந்துள்ள காபி கடை ஒன்றில், 21 வயது இளைஞரை பலமுறை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் 45 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரின் கழுத்து மற்றும் தலையில் வெட்டுக்கள் விழுந்துள்ளன, மேலும் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

இந்த சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை மாலை 4.40 மணியளவில் தங்களுக்கு புகார் வந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே ​​தாக்கியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர் காபி கடையில் காயத்துடன் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தப்பி ஓடிய ஆடவர் ஹௌகாங் அவென்யூ 5 இல் உள்ள வீட்டில் பிடிபட்டார், அதாவது சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகள் நடந்துவருகின்றன, அவர் மீது இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர்- திருச்சி, சென்னை விமானங்கள் தாமதம்.. கடும் அவதியை சந்தித்த ஊழியர்கள், பயணிகள்