காபி ஷாப்பில் வெளிநாட்டு ஊழியரின் பையை நைசாக தூக்கி சென்ற நபர் (CCTV வீடியோ) – வலைவீசி தேடிவரும் போலீஸ்

man-steal-bag-woodlands-kopitiam

உட்லண்ட்ஸில் அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றின் வழியாக சாதாரணமாக நடந்து சென்ற ஆடவர் ஒருவர், பட்டப்பகலில் மலேசியப் பெண்ணின் பை ஒன்றை துணிச்சலாக எடுத்துச் சென்ற வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த சம்பவம் கடந்த ஜன., 27 அன்று மாலை 4.35 மணியளவில் Kopitiam Vista Pointல் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூர் அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: வெளிநாட்டு பணிப்பெண் உயிரிழந்த சோகம்!

இச்சம்பவம் தொடர்பான காட்சிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் பேஸ்புக்கில் ஜன., 27 இரவு பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த பையில் தனிப்பட்ட பொருட்கள், தனது குடும்பத்திற்கு அனுப்ப எண்ணியிருந்த S$1,000க்கும் அதிகமான ரொக்க பணமும் இருந்துள்ளது.

வேலைக்கு மாற வேண்டியிருந்ததால் தன் பையை கவனிக்காமல் அந்த பெண் ஊழியர் அங்கு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட காதலன் தனது பதிவில் கூறியதாவது; இது பற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரைப் பற்றி எந்தத் தகவல் தெரிந்தாலும் அதை தெரிவிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மோசடியில் பாதிக்கப்பட்ட 790 பேருக்கு S$13.7 மில்லியன் தொகையை தானே முன்வந்து செலுத்திய OCBC வங்கி