NTU தங்கும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்த வெளிநாட்டு ஆடவர் மீது குற்றச்சாட்டு

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (NTU) உள்ள தங்கும் விடுதி அறைக்குள் புகுந்து பெண்ணை தீர்த்துக் கட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்த வெளிநாட்டு ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) அன்று, 22 வயதான காங் மியாட் சான் என்ற அந்த ஆடவர் மீது அத்துமீறல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தியருக்கு சிறை, ஆறு பிரம்படிகள்.. சிங்கப்பூரில் இளம் பெண்ணை தூக்கிச்சென்று மானபங்கம் செய்த கொடூரம்

அவரது காதலியை காயப்படுத்தும் நோக்கத்துடன் அவர் இந்த செயலில் ஈடுபடவில்லை என்ற வாதமும் அங்கு வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், காங் அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் அல்ல என்று NTU கூறியது.

மேலும், பாதிக்கப்பட்டவருடனான அவரது உறவு என்ன என்பதை குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்படவில்லை.

அவர் பிஞ்சாய் ஹாலில் உள்ள தங்கும் விடுதி அறைக்குள் கடந்த ஜனவரி 17 அன்று இரவு 8 மணியளவில் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

பிஞ்சாய் ஹால் என்பது பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள NTU மாணவர்களுக்கான வசிப்பிடமாகும்.

இந்நிலையில், மியான்மர் நாட்டவரான காங் மீது கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.,19) அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணைதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு

லாரியுடன் விபத்து.. ஒருவர் மரணம் – அதிர்ச்சியில் உறைந்துபோன வெளிநாட்டு ஊழியர்