சிங்கப்பூரில் இருவரை அவமதித்ததாக இந்தியர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூரில் இருவரை அவமதித்ததாக இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) இரண்டு நபர்களை அவமதித்ததாக இந்தியர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிதாக நடப்புக்கு வந்துள்ள தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபர் இவர் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியா நாட்டை சேர்ந்த 34 வயதான முத்து முருகேசன், என்பவர் இரண்டு நபர்களை அவமதித்ததாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377BA கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டின் 71வது குடியரசு தினவிழா…!

இதில், அவர் இருவரை அவமானப்படுத்தும் வகையில், அவர்கள் முன்பாக, தனது பேண்ட்டை அகற்றி தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஜனவரி 19ஆம் தேதி இரவு 10.20 மணியளவில், சென்டோசாவில் 72 Palawan Beach Walk-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிங்க : ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – விமானக் கண்காட்சி..!

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377BA இன் கீழ், எந்தவொரு நபரை அவமதிக்க வார்த்தை, சத்தம் அல்லது சைகை அல்லது பொருளை வெளிப்படுத்தினாலும், அவருக்கு அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.