ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – விமானக் கண்காட்சி..!

Singapore Airshow 2020 : சிங்கப்பூர் ஏர்ஷோ, சாங்கி கண்காட்சி மையத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 11-16 முதல் நடைபெற உள்ளது. இந்த ஏர்ஷோ 7வது பதிப்பு ஆகும்.

நிகழ்ச்சியின் அமைப்பாளர் Experia Events, இந்த கண்காட்சியில் சிறந்த டாப் 100 விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து 65க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கின்றது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வெளிநாட்டவர்களில் 10 பேரில் 4 பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்..!

மொத்தத்தில், 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 150 நாடுகளைச் சேர்ந்த சுமார் 55,000 வர்த்தக பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதிய business-aviation விமானங்கள், அதாவது டசியால்ட் பால்கன் 6X (Dassault Falcon 6X) மற்றும் எம்ப்ரேயர் ப்ரேட்டர் 500 (Embraer Praetor 500) உள்ளிட்டவை ஆசிய-பசிபிக் ஏர்ஷோவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்ஷோ 60க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை, தொழில் பிரமுகர்களுக்கு காண்பிப்பதற்கான தளத்தையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்ட அமராவதியை தவிர்த்து மேலும் 2 தலைநகரங்கள்…!

அடுத்த மாதம் பிப்ரவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.