சிங்கப்பூர் வெளிநாட்டவர்களில் 10 பேரில் 4 பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்..!

Photo: Business Insider

சிங்கப்பூரில், வெளிநாட்டில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான மலேசியாவைத் தவிர வேறு எங்கிருந்தும் வரவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய புள்ளிவிவரங்கள் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் நிரந்தர குடியிருப்பாளர்கள், ஒர்க்பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் newly-minted பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க : தமிழர் திருநாள் வாழ்த்துக்களை கூறிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்..!

மேலும், கடந்த மூன்று தசாப்தங்களாக சிங்கப்பூரில் குடியேறியவர்களின் சதவீதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 1990ல் மக்கள் தொகையில் 24 சதவீதத்திலிருந்து (727,000 புலம்பெயர்ந்தோர்) 2019ல் 37 சதவீதமாக (2.15 மில்லியன்) அதிகரித்துள்ளது, என்பதை ஐ.நா.வின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் 2019 தரவு தெரிவிக்கின்றது.

சிங்கப்பூரில் குடியேறியவர்களின் முதல் மூன்று நாடுகள்; மலேசியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகியவை என்று ஐ.நா கூறியுள்ளது, மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்ட அமராவதியை தவிர்த்து மேலும் 2 தலைநகரங்கள்…!

குறிப்பாக, இங்கு மலேசிய குடியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவை என்றும் – சீன குடியேறியவர்கள் 400,000-க்கும், இந்தோனேசிய, இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய குடியேறியவர்களும் தலா 200,000-க்கும் குறைவாக உள்ளனர்.

இங்குள்ள வெளிநாட்டில் பிறந்தவர்களின் மக்கள்தொகையில், மலேசிய குடியேறியவர்கள் 44 சதவீதத்தினர், சீன மற்றும் இந்தோனேசிய குடியேறியவர்கள் முறையே 18 சதவீதம் மற்றும் 6.4 சதவீதம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்.டி) தெரிவித்துள்ளது.