மருத்துவரை ஏமாற்றி போலி சான்றிதழ் பெற்ற ஆடவர் மீது குற்றச்சாட்டு.!

Pic: File/Today

முஹம்மது இர்ஷாத் என்ற 24 வயது ஆடவர் ஒருவர், தனக்கு சளிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவரிடம் பொய்யான தகவல்களைக் கூறி மருத்துவச் சான்றிதழ் பெற்றதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 5 நாட்களுக்கு அந்த ஆடவர் வெளியே சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் COVID-19 கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான Circuit breaker நடப்பில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ரமணா நரேந்திரன் என்ற மருத்துவரைக் காணச் சென்ற இர்ஷாத், அவரை ஏமாற்றிச் சான்றிதழ் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

TEMASEK’ நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு உயர்வு!

இதையடுத்து, மருத்துவரிடம் பொய்யான தகவல்களைக் கூறி மருத்துவச் சான்றிதழ் பெற்றதற்காக இர்ஷாத்திற்கு 10,000 வெள்ளி பிணை அளிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த மாதம் நீதிமன்றத்திற்குச் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முறையான காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பெய்த கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரம்