சிங்கப்பூரில் பெய்த கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரம்

Yishun Uprooted tree falls
Photo Via Mothership

சிங்கப்பூரில் யிஷூன் பகுதியில் இன்று (ஜூலை 13) காலை பெய்த கனமழை காரணமாக மரம் ஒன்று வேறொரு சாய்ந்தது.

இந்த சம்பவம், பிளாக் 645 யிஷுன் ஸ்ட்ரீட் 61க்கு அருகில் உள்ள கார் பார்க்கில் நிகழ்ந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் மேலிருந்து கவிழும் பேருந்தின் CCTV காணொளி

காலை 8:39 மணிக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியானது.

மரம் வேரோடு சாய்ந்ததால் கார் பார்க்கில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மேலும் விழுந்த மரத்தை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, நீ சீன் ஜி.ஆர்.சி எம்.பி. பைஷல் இப்ராஹிம் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மரம் ஒரு மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.