போலி ATM கார்டுகளை தயாரித்து, அதனை பணம் எடுக்க பயன்படுத்திய நபர் கைது

man-clone-cards-withdraw-atm-arrested
SPF

போலியான கட்டணம் செலுத்தும் அட்டைகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த அட்டைகளை தயாரிப்பதற்கான உபகரணங்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“6 மாதங்கள் வரை வேலை இல்லை” – பட்டதாரி ஊழியர்களுக்கு ஏற்பட்ட சோதனை

தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (ATM) பணத்தை எடுக்க போலியான மெட்டல் கார்டு பயன்படுத்தப்பட்டதாக பிப்ரவரி 7 ஆம் தேதி காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.

அந்த ATM எந்த வங்கிக்கு சொந்தமானது என்ற விவரத்தை சிங்கப்பூர் காவல் படை வெளியிடப்படவில்லை.

தொடர் விசாரணையின் மூலம், வணிக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, கடந்த பிப்ரவரி 16 அன்று கைது செய்தனர்.

இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.