வீட்டில் இறந்து கிடந்த முதியவர் – துர்நாற்றம் வீசியதை அடுத்து கண்டுபிடிப்பு

man-death-bukit-batok
Shin Min Daily News

புக்கிட் பாடோக்கில் உள்ள HDB வீட்டில் கடந்த அக்.23 அன்று காலை 76 வயது முதியவர் இறந்து கிடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பிளாக் 179 புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 8 இல் அந்த முதியவர் தனியாக வசித்து வந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்

இந்நிலையில், முதியவரின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அவர்கள் வந்துபார்த்தபோது முதியவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த முதியவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால் அவருக்கு கால்கள் வீங்கி, காயங்கள் இருக்கும் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக, அவர் ஒவ்வொரு இரவும் சூடான துண்டைப் பயன்படுத்தி தனது கால்களைத் தட்டுவார் என்றும், அந்த தட்டுதல் சத்தம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அக்.21 முதல் அக்கம்பக்கத்தினர் அந்த சத்தத்தை கேட்கவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததை சிங்கப்பூர்க் காவல் படை உறுதிப்படுத்தியது.

அந்த முதியவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்