வாடகை கார், மற்றொரு காரில் மோதி விபத்து (வீடியோ): கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் மரணம்

@sgfollowsall/Instagram

வாடகைக் கார் ஒன்று மற்றொரு காரில் மோதிய சம்பவத்தில் ஏற்பட்ட தீயால் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று ஜன.7ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், பிளாக் 42 காசியோ கிரசென்ட்டில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடித்தது குறித்து தகவல் போலீசாருக்கு கொடுக்கப்பட்டது.

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு அரசாங்க நிதி: சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தகுதி – நிதி உதவி எவ்ளோ தெரியுமா?

விபத்தை தொடர்ந்து கார் புகையால் நிரம்பியது, அதன் பின்னர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரும் அவரது கணவரும் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளே யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனையிட்டனர்.

அப்போது காருக்குள் அசையும் சத்தம் கேட்ட அந்த பெண், யாரோ இருப்பதை உணர்ந்தார். பின்னர், அவர் தனது கணவரிடம் காவல்துறையை அழைக்குமாறு கூறினார்.

அப்போது பலமாக வெடித்த சத்தம் கேட்டது என்றும், அது கார் வெடித்த சத்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, எரியும் காரிலிருந்து பாதிக்கப்பட்ட ஆடவரை வெளியே இழுக்க போலீசார் முயற்சித்ததாகவும், ஆனால் அது பயனளிக்கவில்லை என்றும் அந்த பெண் குடியிருப்பாளர் கூறினார்.

SCDF தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தீ நீடித்ததாக ST கூறியது. பின்னர் மாலை 3.40 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் மதர்ஷிப்பிடம் தெரிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன. காணொளி

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை, அபராதம்