சிங்கப்பூரில் காவல் நிலையம் முன் தீ விபத்து; தூண்களில் “ISIS” என்று எழுதியிருந்ததாக குற்றச்சாட்டு..!

Man detained and charged over fire outside police post in Boon Keng
Man detained and charged over fire outside police post in Boon Keng (PHOTOS: STOMP, KELVIN TAN)

சிங்கப்பூரில் பூன் கெங்கில் (Boon Keng), நெயிபெர்ஹூட் போலீஸ் போஸ்ட் (NPP) முன் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 30 வயது நபர் கைது செய்யப்பட்டு, மேலும் அவர் மீது இந்த விபத்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, மேலும் இது பயங்கரவாத செயல் அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் தனியாக செயல்பட்டதாகவும், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தி சில துணிகளுக்கு தீ வைத்து, NPPயின் கண்ணாடி கதவை அடித்து நொறுக்கியதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் போஸ்ட்-க்கு அருகிலுள்ள சில தூண்களில் அவர் “ISIS” என்று எழுதியிருந்ததாக மேலும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், சமூக ஏற்றத்தாழ்வு குறித்து அதிருப்தியடைந்த அவர் தனிப்பட்ட முறையில் அந்தச் செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் சிங்கப்பூரர் சிவபிரகாஷ் மயில்ராவணன் மீது தீ விபத்து தொடர்பாக குற்றம் (மார்ச் 14) சாட்டப்பட்டுள்ளது.

கூடுதல் விசாரணைகளுக்காக அவர் ரிமாண்ட் செய்யப்படுவார் என்றும், மேலும் அவருடைய மனநலனைச் சோதிப்பதற்கான உத்தரவுக்காக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Source : Straits Times

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக மேலும் 13 பேருக்கு COVID-19 உறுதி; மொத்த சம்பவம் 200ஆக உயர்வு..!