ஓட்டுநர் உரிமம் இல்லை.. முதலாளிக்கு தெரியாமல் காரை ஓட்டி வந்து விளக்கு கம்பத்தில் மோதியவர் கைது

man-driving-without-licence accident
Beh Chia Lor - Singapore Road on Facebook

யுஷூனில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 31 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் திங்கள்கிழமை (ஜூன் 5) இரவு நடந்த இந்த சம்பவத்தில், காரை அதன் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அவர் ஓட்டி வந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாதிக்கப்படும் 32 பேருந்து சேவைகள்; ஏன்..?

அன்று இரவு சுமார் 7:30 மணியளவில் கார் மற்றும் வேன் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

யுஷூன் அவென்யூ 1 நோக்கி சென்ற அந்த கார், யுஷூன் அவென்யூ 6ல் உள்ள தெரு விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும், உரிமையாளரின் அனுமதி இல்லாமல் ஓட்டியதற்காகவும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 32 வயதான வேன் ஓட்டுநர் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்