நண்டு மசாலாவில் சிம் கார்டு ட்ரே பின்… ஒன்னு வாங்குனா ஒன்னு பிரீ – நொந்துபோன ஊழியர்

Man finds SIM card tray pin in sauce while eating chili crab at Joo Koon restaurant
Shin Min Daily News

கைப்பேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டு ட்ரே பின் (Pin) ஒன்று, நண்டு மசாலாவில் கண்டெடுக்கப்பட்டது பேசும்பொருளாக மாறியுள்ளது.

ஜூ கூனில் ஊழியர் ஒருவர் தனது தாயுடன் சில்லி நண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதில் சிம் கார்டு ட்ரே பின்னைக் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கிள் லியோங் சிக்னேச்சர்ஸ் உணவகத்தில், அன்னையர் தினமான மே 14 அன்று நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு

அன்னையர் தினத்தில் தனது தாயாருக்கு விருந்துகொடுக்க சென்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

சில்லி நண்டு மசாலா ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையைப் பயன்படுத்தி அதனை ஆன்லைனில் முன்கூட்டியே ஆர்டர் செய்ததாக ஆடவர் கூறினார்.

இதனை அடுத்து அதனை சாப்பிடும்போது தான் தெரிந்தது, அதில் நண்டு மட்டும் இல்லை சிம் கார்டு பின்-னும் உள்ளது என்று.

உணவக நிர்வாகம் இது பற்றி கூறுகையில்; “வேலை நேரங்களில் ஊழியர்கள் கைபேசி பயன்படுத்த முற்றிலும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளோம்.”

“இருப்பினும், CCTV கண்காணிப்பு அமைப்பைச் சரிபார்த்த போதிலும், நண்டு மசாலாவில் Pin எப்படி வந்தது என்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.”

“இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்போம்” என்றும் மேலாளர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சட்டத்திற்கு புறம்பான சதி வேலையில் ஈடுபட்டு சிக்கிய 3 வெளிநாட்டவர்கள்