இடம் மாறியும் முகரியை தெரிவிக்காத ஆடவர் – 28 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை… அபராதம் விதித்தது ICA

PHOTO: Today

சிங்கப்பூர்: மாறிய வீட்டின் முகவரியில் முறையாக தெரிவிக்கத் தவறியதற்காக ஆடவர் ஒருவருக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது

62 வயதுடைய சிங்கப்பூரர் லீ கா ஹின் என்பவருக்கு நேற்று செவ்வாயன்று (மே 23) S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்

மாறிய வீட்டின் முகவரியை 28 நாட்களுக்குள் பதிவு செய்யாமல் இருந்தது, தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

அவர் ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள வீட்டை விட்டு குடிபெயர்ந்தார். லீ வீடு மாறி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதே வீட்டு முகவரிக்கு கடிதங்கள் வருவதாக வீட்டின் உரிமையாளர் ICA ஆணையத்திடம் தெரிவித்தார்.

லீ தனது பழைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, தெம்பனீஸ் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு புதிய இடத்திற்குச் சென்றுள்ளார்.

அதன் பிறகும், அவர் தனது பழைய முகவரியைப் பயன்படுத்தி உரிமம் பெற்ற பல்வேறு வணிகர்களிடம் கடன்களையும் பெற்றுவந்துள்ளார்.

பல்வேறு கடன் நிறுவனங்களில் இருந்து அவருக்கு கடிதங்கள் வருவதாக உரிமையாளர் புகார் கூறியதை அடுத்து அவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்