போலீசிடம் “உங்கள் சம்பளத்தை நாங்கள் செலுத்துகிறோம்..****” என தகாத முறையில் பேசிய இந்திய ஆடவருக்கு அபராதம்!

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் மது அருந்துவதை நிறுத்துமாறு கூறிய போலீசாரிடம் தகாத பேச்சுகளை பேசிய இந்திய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மது அருந்துவதற்கான தடை நேரம் இரவு 10.30 மணியைத் தாண்டியதால், காபி கடையில் மது அருந்த வேணாம் என சொன்னபோது காவல்துறையினரை கடுஞ்சொற்களால் பேசிய அவருக்கு S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரணம் ஏற்படுத்திய நிறுவனம், மேலாளர் மீது குற்றச்சாட்டு

சஞ்சீவ் குமார் சிவராஜ் (வயது 32) போலீஸ் அதிகாரியிடம், “உங்கள் சம்பளத்தை நாங்கள் செலுத்துகிறோம்….” என தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இந்த அபராதத் தொகையை சஞ்சீவ் செலுத்தாவிட்டால், இரண்டு வாரங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதில், பொது ஊழியரான போலீசாரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

பொது ஊழியரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, ஒரு வருடம் வரை சிறை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்