லாட்டரி சீட்டை வாங்கும் போது, ​​வாடிக்கையாளரின் கைபேசியை எடுத்து சென்ற ஆடவருக்கு அபராதம்

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடையில் லாட்டரி சீட்டை வாங்கும் போது, ​​வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைபேசியை டெலிவரி செய்யும் ஆடவர் ஒருவர் எடுத்துச் சென்றார்.

பார்சல் டெலிவரி ஓட்டுநரான Tan Khew Haiக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 58 வயதான அவர் முறைகேடு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Breaking: VTL விமான, பேருந்து புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தம்

இதில் பாதிக்கப்பட்ட 54 வயது பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி கீட் ஹாங் லிங்கில் உள்ள பிளாக் 817ல் உள்ள UStar Mega Mart சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்குள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் இருந்து லாட்டரி சீட்டை வாங்கிய பெண், கடை கவுண்டரில் கைபேசியை வைத்துவிட்டு, அப்படியே மறந்து சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் ஆடவரும் லாட்டரி சீட்டை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கைபேசியை பார்த்த அவர் அதனை எடுத்துக்கொண்டார்.

பின்னர் போனை எடுத்துக்கொண்டு காரில் சென்றார் என்றும், தொலைபேசியைத் திருப்பித் தர எண்ணம் இல்லாததால், அவர் சரியான உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு கடைக்கு திரும்பினார், ஆனால் அவரது தொலைபேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து ஆன்லைன் மூலம் போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து அந்த ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், போன் மீட்கப்படவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடிகள் நீட்டிப்பு!!