ATM இயந்திரத்தில் பணத்தை எடுக்காமல் சென்ற ஆடவர்.. காணாமல் போன பணம் – போலீஸ் விசாரணை

dbs-ocbc-uob-money-lock-scam-protect
(Photo: Asiaone)

ATM இயந்திரத்தில் இருந்து $500 பணத்தை எடுக்க வந்த ஆடவர் ஒருவர், எல்லாம் செய்துவிட்டு தனது பணத்தை மட்டும் எடுக்காமல் மறந்து விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், யாபகம் வந்த பிறகு அவர் ATM சென்று பார்த்துள்ளார், ஆனால் அதில் பணம் இல்லை.

சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல… ஜோசியம் பார்த்து “4D அதிஷ்ட எண்கள்” கொடுக்கும் ஆடவர்

பின்னர், அவர் தனது இணைய வங்கி செயலியைச் சோதித்தபோது, ​​பணம் அவரது கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்யப்படவில்லை.

இதனால் அவரது பணத்தை அனுமதியின்றி வேறு யாரோ எடுத்துச் சென்றதாக அவர் நம்புகிறார்.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று காலை 10 மணிக்கு Yew Tee ரயில் நிலையத்தில் உள்ள POSB ATM இயந்திரத்திலிருந்து $500 எடுத்ததாக அவர் ஸ்டாம்ப்-பிடம் கூறினார்.

இது குறித்து கடந்த செப்.4 ஆம் தேதி அவர் போலீசில் புகார் செய்தார்.

ஆனால், இதுவரை எனது பணத்தை திரும்பப் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து புகாரை பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

“பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்” – இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் – விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர்