ஆடவர் ஒருவருக்கு 20 பிரம்படி, 16 ஆண்டுகள் சிறை விதிப்பு

Capital punishment in Singapore is a legal penalty

14 வயது சிறுமியை நாசம் செய்ததாக 20 வயது இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு சேர்த்து, 20 பிரம்படிகளும் விதித்து நேற்று வெள்ளிக்கிழமை (அக் 6) தீர்ப்பளிக்கப்பட்டது.

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்… நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்

18 வயதான முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர், குற்றத்தில் ஈடுபடும்போது முழுநேர தேசிய சேவையாளராக பணிபுரிந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

பாலியியல் நாசம் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளையரை பாலியல் ரீதியாக பாதிக்கச் செய்த ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான மற்ற ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது, அனைவரும் மது போதையில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியின் நண்பர் அஸ்ரி என்பவரின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக நாசம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிக்கு யாரும் இல்லாமல் ஆபத்தில் இருந்த மூதாட்டிக்கு ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர் – பாராட்டு