சாங்கி சிறைச்சாலையில் தகராறு: சக கைதியின் காதை கடித்து துப்பிய ஆடவர் – 10 மாதச் சிறை.!

Man gets more jail
Pic: SPS

சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் காப்பித் தூள் காரணமாக ஏற்பட்ட சண்டையில், சக கைதியின் காதை கடித்த ஆடவருக்கு கூடுதலாக 10 மாதச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தியோ சாய் லை (Teo Chye Lye), லிம் லீ யாட் (Lim Lee Yat) என்ற இருவரும் சாங்கி சிறைச்சாலையில் காப்பித் தூளைச் சிறிது சிறிதாக பொட்டலம் போடும் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.

கொரோனா பாதிப்பு: Yuhua சந்தை மற்றும் ஹாக்கர் மையம் மூடல்.!

பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சிறிது கீழே சிந்திய காப்பித் தூளை தியோ, லிம்மின் பக்கம் தள்ளினார். லிம், அதிகம் பொட்டலங்களை போட வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர், கடுப்பில் லிம்மின் இடது காதின் மேல் பகுதியை தியோ கடித்துப் துப்பினார், இதையடுத்து லிம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லிம்மை வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்திய குற்றத்தை தியோ ஒப்புக்கொண்டார். தற்போது தியோ ஏற்கனவே அனுபவிக்கும் சிறைத்தண்டனை முடியும் நேரத்தில், கூடுதலாக 10 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்.

லாரியில் இருந்து சாலையின் நடுவே சிதறிய பெட்டிகள்.. ஓடி உதவிய நல்லுள்ளங்கள்