கொரோனா பாதிப்பு: Yuhua சந்தை மற்றும் ஹாக்கர் மையம் மூடல்.!

Yuhua hawker centre closed
Pic: Google Maps

347 Jurong East Avenue 1-இல் உள்ள Yuhua சந்தை மற்றும் ஹாக்கர் மையம் (Yuhua Market & Hawker centre) ஆகஸ்ட் 19ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அங்கு, பணிபுரிவோர் அல்லது வருகை புரிந்தோரில், 7 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் Yuhua சந்தை, ஹாக்கர் மையம் ஆகஸ்ட் 19ம் தேதி வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரியில் இருந்து சாலையின் நடுவே சிதறிய பெட்டிகள்.. ஓடி உதவிய நல்லுள்ளங்கள்

அங்கு பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் தனிமைப்படுத்தப்படும் காலத்தில், அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை Yuhua சந்தை, ஹாக்கர் மையத்திற்கு சென்றுவந்தவர்களுக்கு இலவச கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும், கூடுதல் விபரங்களுக்கு https://go.gov.sg/yuhua-testing என்ற இணையத்தை நாடலாம்.

Yuhua சந்தை, ஹாக்கர் மையத்திற்கு சென்றவர்கள் 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை அணுக்கமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்துதல் இல்லை!