சிங்கப்பூரில் அதிகாரிகளை அச்சுறுத்தியதற்காகவும், தவறாக பேசியதற்கும் ஒருவருக்கு 7 மாதங்கள் சிறை..!

Man jailed 7 months for verbally abusing, threatening police and safe-distancing officers
Man jailed 7 months for verbally abusing, threatening police and safe-distancing officers (Photo: Google Street View )

சிங்கப்பூரில் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒருவருக்கு ஏழு மாத சிறைத்தண்டனை (மே 6) விதிக்கப்பட்டுள்ளது.

இவர், COVID-19 நடவடிக்கைகளுக்கு இணங்குமாறு வலியுறுத்திய காவல்துறை மற்றும் பாதுகாப்பு-இடைவெளி அமலாக்க அதிகாரிகளை தகாத முறையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 4,800 இந்தியர்கள் பாதிப்பு – தூதர்…!

காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளை தகாத முறையில் பேசிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் மூன்று சுகாதார அதிகாரிகளின் “முகங்களை உடைப்பேன்” என்று மிரட்டிய மூன்றாவது குற்றச்சாட்டுக்கும், 53 வயதான ரவி சின்னத்தம்பி சுப்பிரமணியம் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கூடுதலாக, தண்டனைக்கு மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பபட்டுள்ளன.

ரவி கடந்த மாதம் இரண்டு நாட்களில் குற்றங்களைச் செய்துள்ளார். முதலில் ஏப்ரல் 14 அன்று பிளாக் 64, வாம்போவா டிரைவில் உள்ள ஹாவோ மார்ட்டுக்குச் (Hao Mart) சென்றார்.

அங்கு அதிகாரிகளிடம் சத்தமாக பேசியதாகவும், பின்னர் காவல்துறையினர் அவருடன் பேசியபோது, ​​அவர் ஆக்ரோஷமாக மாறி, அதிகாரிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதே போல அவர், பல ஆண்டுகளாக பல்வேறு குற்றங்களைச் செய்து வந்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கூட அவர், தமது சகோதரர்மீது வெந்நீர் ஊற்ற முற்பட்டதுடன் கத்தியைக் காட்டி மிரட்டியதாவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 788 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!