சிங்கப்பூரில் போலி சம்பள ஆவணங்களைக் காட்டி வங்கியில் கடன்; ஆடவருக்கு சிறை.!

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

சிங்கப்பூரில் போலியான சம்பள ஆவணங்களைக் காட்டி வங்கியில் கடன் பெற்ற ஆடவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. அஹமட் ரிஃபை அப்துல் கரிம் என்ற ஆடவர் சிட்டி வங்கியை ஏமாற்றி கடன் பெற்றவர்களில் ஒருவர் என்றும், அவருக்கு வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த ஒருவர் உதவி செய்துள்ளதாகும் கூறப்படுகிறது.

வங்கியில் 20 கடன் விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடன் தொகையும் 24,000 வெள்ளி ஆகும். இந்த வழக்கில் அஹமட் ரிஃபை உட்பட பல நபர்களைக் உள்ளடக்கியிருக்கிறது. அஹமட்டுக்கு கெவின் என அழைக்கப்படும் 26 வயது குருமூர்த்தி சந்திரன் உதவி இருப்பதாக கூறப்படுகிறது. குருமூர்த்தி மீதான வழக்கு விசாரணையும் தனியாக நடந்துள்ளது.

போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது

இதுமட்டுமின்றி, மற்றொரு சம்பவத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் சகோதரர் திருடியதாகக் கூறப்படும் மோட்டார் பைக்கை அஹமட் வைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஹமட்டுக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஓராண்டு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த அஹமட் ரிஃபை, திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றத்தையும், ஏமாற்றும் சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். அவருக்கு 15,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டது. அஹமட்டுக்கு தண்டனையைத் தொடங்க மார்ச் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குருமூர்த்தி மற்றும் முன்னாள் சிட்டி வங்கி ஒப்பந்த ஊழியர்களான மேலும் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் (COE) கட்டணங்கள் அதிகரிப்பு