போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது

(PHOTO: Reuters)

மலேசியா: போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை விற்பனை செய்த மோசடி வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் காவல்துறை கூறியுள்ளது.

வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) இயக்குநர் தத்துக் முகமட் கமருடின் MD டின் இது பற்றி கூறுகையில்; ஒன்பது வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

பொடுபோக்கான மருத்துவத்தால் உயிரிழந்த தமிழக ஊழியர்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம்!!!

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று மருத்துவர்கள், மூன்று தாதிகள், ஏழு முகவர்கள், ஒரு கிளினிக் ஊழியர் மற்றும் 11 பொதுமக்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாவில் சமீபத்திய வழக்கில், போலி தடுப்பூசி சான்றிதழ்கள் விற்பனை தொடர்பாக மருத்துவர் மீது பிப்ரவரி 4ஆம் தேதி கிளினிக் ஊழியர் புகார் அளித்தார்.

பின்னர், கடந்த திங்களன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் 37 வயதான மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!