வாட்ஸ்அப் குரூப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ: சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கு சிறை.!

Pic: AFP phonepe shift headquatress to india from singapore

சிங்கப்பூரில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த 25 வயதான கொலம்பாகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்தவராவார்.

பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 வீடியோக்களை அவர் மொபைலில் வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். அவர் வைத்திருந்த வீடியோ ஒன்றில் குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறத்தப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி

இந்த வழக்கு தொடர்பாக இலங்கையை சேர்ந்த மற்றொரு நபரான ஹிண்டாகும்புரே சரிண்டு தில்ஷன் ராஜபக்சே (29) என்பவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபருக்கு எதிராக நடத்தப்படும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இலங்கை நாட்டு பற்றிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள தாம் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று தொடங்கியிருப்பதாக கொலம்பாகேயிடம் ஹிண்டாகும் புரே கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கை நாட்டவர்கள் பலரை கொண்ட அந்த குழுமம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த குழுமத்தில் நாள்டைவில் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் குழுவில் ஆபாச காணொளிகள் பகிர்வது தெரிந்தும் கொலம்பாகே அந்த குழுமத்திலிருந்து வெளியேறவில்லை. ஆபாசக் வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது தமது மொபைலில் பதிவான ஆபாசப் படங்களை நீக்க முயன்றதை கொலம்பாகே ஒப்புக்கொண்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஆசிரியர் மீது கோபம்…”என்ஜாய் பண்ணுங்க” என தவறான வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்ட மாணவன்…