13 பீர் பாட்டில்களை வீசி எறிந்து அடாவடி – துப்புரவு ஊழியருக்கு சிறை

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

சிங்கப்பூர்: HDB குடியிருப்பின் 7வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து 13 பீர் பாட்டில்களை வீசி எறிந்த துப்புரவு ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சில மாதங்களாக ஈடுப்பட்டு வந்த அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (டிச.13) 15 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

S Pass அல்லது work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரெடியா இருங்க!

துப்புரவு ஊழியரான 58 வயதான லிம் லை சூன் என்ற அவர் தனது கைகளில் மருத்துவ பிரச்சனை இருந்ததன் காரணமாக அவ்வாறு செய்ததாக கூறினார்.

மேலும் அவரின் பிளாட் புதுப்பிக்கப்பட்ட பிறகு, கண்ணாடி பாட்டில்களை குப்பைக் கிடங்கில் போடுவது கடினமாக இருந்ததாலும் அவ்வாறு செய்ததாகக் கூறினார்.

ஜூரோங் வெஸ்டில் அவரின் வீடு உள்ளது. பீர் பாட்டில்களை அங்கிருந்து வீசி மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திய மோசமான செயலுக்கான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

மாடியில் இருந்து பீர் பாட்டில்கள் வீசப்படுவதாக ஒருவர் போலீசில் புகார் செய்தார், இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்