“தடுப்பூசி தகுதி நிலையை” மற்றொரு ஊழியர் பயன்படுத்தவதற்கு அனுமதித்த வெளிநாட்டவருக்கு சிறை

TODAY

TraceTogether செயலியில் மற்றொரு ஊழியர், தனது தடுப்பூசி நிலையைப் பயன்படுத்த அனுமதித்ததாக வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 29 அன்று, மலேசியாவைச் சேர்ந்த கிரண் சிங் ரக்பீர் சிங், 37, என்ற வெளிநாட்டவர் மீது இந்த ஏமாற்று வேலைக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்

அந்த செயலியின் மூலம் தனது முழு தடுப்பூசி நிலையைப் பயன்படுத்தி அவர் உதயகுமார் நல்லதம்பி என்ற நபரை சைலோசோ கடற்கரையில் உள்ள கோஸ்ட்ஸ் பார் உள்ளே நுழைய அனுமதித்துள்ளார்.

அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 6 மணியளவில் 65 வயதான உதயகுமாரை மதுக்கடைக்குள் நுழைய அவர் அனுமதித்தார். சிங்கின் இந்த செயல் “உதயகுமாரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆள் மாறாட்ட மோசடிக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உதயகுமார் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை